161
இராஜாங்கனை பகுதியை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் உள்ளட்ட பகுதிகளில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 519 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2,646 ஆக அதிகரித்துள்ள நிலையில் 1,981 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திருப்பியுள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #இராஜாங்கனை #கொரோனா #சவேந்திரசில்வா #கந்தகாடு
Spread the love