உலகம் முழுதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 32 லட்சத்து 35 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவில் இரண்டாம் அலை தொடங்கியுள்ளது. அங்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 17 லட்சத்து 91 ஆயிரத்து 767 பேராக அதிகரித்துள்ளதுடன் உயிரிழப்புகள் 1 லட்சத்து 38 ஆயிரத்து 247 ஆக அதிகரித்துள்ளதுடன் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 79 ஆயிரத்து 483 ஆகி உள்ளது.
இதனையடுத்து உலக நாடுகளும் அமெரிக்காவும் இந்தச் சூழ்நிலைகளை எதிர்கொள்ள போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனவே கண்களுக்குத் தெரியும் எதிர்காலத்தில் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை இல்லை என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
வைரஸ் பரவல் படுமோசமாகி வருகிறது, எதிர்காலம் நிச்சயமற்று உள்ளது, இயல்பு நிலை திரும்புமா என்ற சந்தேகம் நாளுக்குநாள் வலுக்கிறதென உலகச் சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.
அதிகளவான நாடுகள் தப்பான வழியில் செல்கின்றன. சில நாடுகளின் அரசுகள் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் இந்த தொற்று மேலும் மோசமாகிக்கொண்டே போகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தொற்றினைக் குறைப்பதற்கான நிரூபிக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நாடுகளில் அபாயகரமான அளவில் தொற்று அதிகரித்துக்கொண்டு செல்கின்றன என்வு; அவர் கூறினார்.
தாம் குறிப்பாக கூற விரும்பவில்லை எனத் தெரிவித்த அவர் ;, நிறைய நாடுகள் தப்பான பாதையில் செல்கின்றன என நேற்றையதினம் ஜெனீவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் மாற்றி மாற்றிப் பேசுவதால், இந்த உலகத் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #உலகம் #இயல்புநிலை #சந்தேகம் #கொரோனா #உலகசுகாதாரஅமைப்பு