199
தலைமன்னாரில் இருந்து படகு மூலம் தனுஸ்கோடி அரிச்சல் முனைக்கு சென்றதாக கூறப்படும் முஹமது உசேன் (வயது-68) என்பவரை இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்த மெரைன் காவலஹதுறையினா் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனுஸ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதியில் முஹமது உசேனை இன்று செவ்வாய்க்கிழமை காலை தலைமன்னாரில் இருந்து சென்ற படகு இறக்கி விட்டு தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து தகவல் அறிந்த மெரைன் காவல்துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று ஊடுருவியவரை மெரைன் காவல்துறை ஆய்வாளர் கனகராஜ் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். இவரிடம் மெரைன்,கியூபிரிவு,உளவுத்துறை சுங்கத்துறை உள்ளிட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையைச் சேர்ந்த முஹமது உசேன் (வயது-68) எனவும் தற்போது திருச்சியில் வசித்து வருவதாகவும் புடவை வியாபாரத்திற்காக இலங்கை சென்றதாகவும் தற்போது போக்குவரத்து முடக்கப்பட்டதால் 30 ஆயிரம் ரூபாய் செலுத்தி இலங்கை படகில் இந்தியா வந்ததாக தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளை காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர். #தலைமன்னாா் #படகு #தனுஸ்கோடி #விசாரணை
Spread the love