165
மன்னார் சின்னக்கருஸல் பகுதியில் சுமார் 6 கிலோ கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளுடன் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை(21) இரவு மன்னார் மாவட்ட காவல்துறை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பண்டுல்ல வீரசிங்கவின் அறிவுரையின் பேரில் மன்னார் காவல் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி கிருசாந்தனின் வழிகாட்டலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப காவல்துறை பரிசோதகர் குமார தலைமையிலான குழுவினர் சின்னக்கருஸல் பகுதிக்கு சென்று நேற்று(21) செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட நடவடிக்கையின் போது மூன்று பொதிகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான 6 கிலோ 90 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளை மீட்டனர். மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினா்மேற்கொண்டு வருகின்றனர். #மன்னார் #கஞ்சா #கைது.
Spread the love