முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.
41 வயதான மொஹமட் காசிம் மொஹமட் நசீம் என்பவரே இன்றுகாலை இவ்வாறு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா தொற்றுக்குள்ளானவர் முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்
Jul 24, 2020 at 05:14
முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரை தேடி கண்டுபிடிக்கும் நோக்கில் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து இன்று (24) அதிகாலை தப்பிச்சென்றுள்ளார் .எனவும் அவர் இடது கால் உபாதைக்கு உள்ளான ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் காவல்துறையினருக்கு உடன் தகவல் வழங்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருகோணமலை, மார்பிள் பீச் ரோட், சீனக்குடா பகுதியை சேர்ந்த 41 வயதானமொஹமட் காசிம் மொஹமட் நசீம் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #கொரோனா #முல்லேரியா #தப்பி #போதைப்பொருள்