கூட்டு வன்முறையுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பாக, கொழும்பு – கிராண்பாஸ் காவல் நிலையத்திலிருந்த தகவல் அடங்கிள 50 கோப்புகள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, வழக்கு தொடரப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகள் காணப்பட்ட கோப்புக்களிலிருந்து பக்கங்கள் கிழித்து எடுக்கப்பட்டுள்ளனவெனவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காவல் துறைத் தலைமையகத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவெனவும், ஆர்மி சம்பத் உள்ளிட்ட பாதாள குழுக்களின் செயற்பாட்டாளர்கள் தொடர்பான ஆவணங்களே இவ்வாறு மாயமாகியுள்ளதெனவும் மேல்மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி காவவல் துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஆர்மி சம்பத்த தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு அவசியமான ‘பி’ அறிக்கைகளே இவ்வாறு மாயமாகியுள்ளதெனவும், இந்த வழக்கு விசாரணைகள் நீண்டகாலமாக இடம்பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் 2011 ஆம் ஆண்டில் திரட்டப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பான தகவல்களே கிராண்பாஸ் காவல் நிலையத்திலிருந்து மாயமாகியுள்ளன எனவும் கூறப்படுகிறது.