வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவுக்குத் தப்பிச் சென்ற ஒருவர், இருநாட்டு எல்லை வழியாகக் கடந்த வாரம் வட கொரியா திரும்பியதாகவும் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிரேஸ்ட அதிகாரிகளுடன் அவசர கூட்டத்தை நடத்திய வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன், எல்லை நகரான கேசாங்கில் பொது முடக்கத்தை அறிவித்துள்ளார்.
தங்கள் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பே இல்லை என முன்பு வட கொரியா தெரிவித்திருந்த போதும் அதற்கு வாய்ப்பே இல்லை என நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். #வடகொரியா #கொரோனா #தென்கொரியா