யாழில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
தவறான தகவல்களை வழங்கி இளையோரின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். அதுதொடர்பில் எமது வேட்பாளர்கள் தெளிவூட்டல்களை வழங்கி வருகின்றனர்
“வடக்கு – கிழக்கில் அரசு சார்புக் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுவோர் தமிழ் இளையோர்களைத் தமது பக்கம் ஈர்ப்பதற்காக, உங்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று தவறான தகவல்களை வழங்குகின்றனர். அத்தோடு சிலர் விண்ணப்பப்படிவங்களை வழங்கி தேசிய அடையாள அட்டை உள்ளிட்டவற்றின் விவரங்களைப் பெற்று வருகின்றனர்.
அது அப்படி நடக்க முடியாது. திடீரென்று ஒரு வேலைவாய்ப்பை வழங்க முடியாது. நாடாளுமன்றம் உருவாகியதன் பின்னர், அதுதொடர்பில் நாடாளுமன்றுக்கு அறிவித்ததன் பின்னரே வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். தேர்தல் காலத்தை ஒட்டியோ, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காகவோ வேலைவாய்ப்புக்களை வழங்க முடியாது.
இது தொடர்பில் எமது வேட்பாளர்களினாலும் பல்கலைக்கழக மாணவர்களிலும் தமிழ் இளையோர்களிடம் எடுத்துரைத்து வருகின்றோம்.” என தெரிவித்தார். #வடக்குகிழக்கு #வேலைவாய்ப்பு #பரப்புரை #மாவைசோசேனாதிராசா