ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 17 போ் உயிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. ஈத் பெருநாளுக்காக பொதுமக்கள் பலரும் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த சமயத்தில் மாகாண ஆளுநரின் அலுவலகம் அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
ஈத் பெருநாளை முன்னிட்டு தலிபான் அமைப்பினர் அறிவித்துள்ள மூன்று நாள் சண்டை நிறுத்தம் இன்று, வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வருகின்ற நிலையில் நேற்று வியாழக்கிழமை இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த குண்டு வெடிப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று தலிபான் அமைப்பின் தொிவித்துள்ள போதிலும் இஸ்லாமிய அரசு அமைப்பு இதுகுறித்து கருத்து எதையும் வெளியிடவில்லை.
இந்தத் தாக்குதல் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று லோகர் மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக சா்வதேச செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசு மற்றும் தலிபான் அமைப்பினர் இடையே நிரந்தரமான சண்டை நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கைகள் உள்ள போதும் கைதிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பான சிக்கல்களால் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து தாமதமாகி வருகிறது. 4,400க்கும் அதிகமான தலிபான் கைதிகளை தாங்கள் விடுவித்துள்ளதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளதுடன் தம்வசமுள்ள அரசு தரப்பை சேர்ந்த 1,005 கைதிகள் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தலிபான் அமைப்பினா் தெரிவித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது #ஆப்கானிஸ்தான் #குண்டுவெடிப்பு #ஈத்பெருநாள் #தலிபான் #சண்டைநிறுத்தம்