02.08.2020
2020 பொது தேர்தலும் தமிழர்களும்
சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலம் இது
மாற்றம் தேவை ..
இளைஞர்களுக்கு வழிவிடுவோம் …. அபிவிருத்தியே எங்கள் இலக்கு….
என்று பல கோசங்களுடன் பல கட்சிகள் பல சுயேச்சை குழுக்கள் களங்கமிறங்கியுள்ளன களமிறக்கப் பட்டுள்ளன.
நோக்கங்கள் யாவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் இது பலப்பரீட்சை பார்க்க உள்ளூராட்சி தேர்தல் அல்ல பாராளுமன்ற தேர்தல்!
கடந்த பொதுத் தேர்தலில் 16 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ்மக்களாகிய நாம் பாராளுமன்றம் அனுப்பி இருந்தோம்.அவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி மேலோங்கி இருந்தாலும் அவர்கள் இல்லாவிடில் என்னவெல்லாம் நடத்திருக்கும் எனபதை உங்கள் அரசியல் முதிர்ச்சிப் பார்வையில் பாருங்கள் எந்த ஒரு அரசும் தங்கத் தட்டில் வைத்து எமக்கான தீர்வை தரப்போவதுமில்லை அதை அவர்களிடம் நாம் எதிர்பாரக்க முடியாது ஆனால் அது தொடர்ச்சியான பாராளமன்ற சர்வதேச அளுத்தங்கள் மூலமே நகரத்த வேண்டும் அதற்கு எமக்கு அதிக எண்ணிக்கையான விலைபோகாத பாராள மன்ற உறுப்பினர்களே தேவை.
வடக்கு கிழக்கு பொதுத்தேர்தல் நிலவரம் .
26 மேற்பட்ட அரசியல் கட்சிகள் 27 சுயேட்சை குழுக்கள் களமிறங்கியுள்ளன. இதில் முஸ்லிம் சிங்களவாக்குகள் அதிகம் சிதைவடையாமல் அதிக ஆசனங்களை பெற 3 பிரதான கட்சிகள் ஒரு சின்னத்தில்( தொலைபேசி ) போட்டியிடுகிறார்கள் .
ஆனால் இந்த 26 அரசியல் கட்சிகளில் 14 கட்சிகள் தமிழ்கட்சிகள். தமிழ் மக்களுக்கு எந்த வேட்பாளர் எந்த கட்சியில் உள்ளனர் என்றே குழப்பமாக உள்ளது.
ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தையும் இழக்கும் நிலமை
திருகோணமலை அம்பாறை போன்ற மாவட்டங்களில் எல்லோரும் ஒன்றாக ஒரு கட்சிக்கு வாக்களித்தாலும் ஒரு பிரதிநிதியையே தேர்வு செய்யமுடியும் என்ற நிலையில் தங்களால் பாராளமன்ற பிரதிநிதித்துவத்தை பெறமுடியாது என்று தெரிந்தும் போட்டியிட்டு ஒரு பிரதிநிதியையும் இல்லாமல் செய்யும் உள்நோக்கத்தையும் மக்கள் உணரவேண்டும்
திருகோமலை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெற குறைந்தது 40 000 வாக்குகளைப் பெற வேண்டும். ஆதலால் தமிழர்களாகிய நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலம் இது.
எமது மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக ….
பேரினவாதக் கட்சிகளால் சில தரகர்கள் (Agent) நியமிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களிற்கான இலக்கு சில நூறு் தமிழ் வாக்குகளை அந்த கட்சிகளுக்காக பெற்று கொடுப்பதே அதற்காக அவர்களுக்கான கைமாறாக பணமோ தங்கள் தொழிலுக்கான அனுமதி ( மண் அகழ்வு ) தங்கள். பிள்ளை அல்லது தனக்கான ஒரு வேலை வாயப்பு போன்ற விடயங்களை நிறைவேற்றி் கொள்வார்கள் ஆனால் வாக்களித்த உங்களுக்கு எதுவும் கிடைக்க போவதில்லை அதே நபர் அடுத்த வருடம் வேறொரு பெரும்பான்மை கட்சிக்காக வந்து உங்களிடம் வாக்கு கேட்பார் .இது தான் மாறி மாறி எம்மக்களை ஏமாற்ற சில நபர்கள் போடும் நாடகம் .
உள்ளூராட்சி தேர்தலில் 1000 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைக் கூட பெறும் அளவிற்கு செல்வாக்கு இல்லாத கொள்கை இல்லாத வாக்கு வங்கிகள் இல்லாத கட்சிகள் கூட 40 000 வாக்குகளைப் பெற்று பாராளமன்றம் செல்ல முயற்சிப்பது என்பது இருக்கும் ஒன்றிரண்டு பாராள மன்ற பிரதிநிதித்துவத்தையும் இழக்க வைக்கும் செயலாகும் .
ஒற்றுமை முயற்சிகள்
இரண்டு பிரதான தமிழ் கட்சிகள் மட்டும் இத்தேர்தலில் நின்றிருந்தால் இவ்வறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது ஏனனில் இரண்டு அணியிலும் யாரோ ஒரு தமிழர் தான் தெரிவு செய்யப்பட போகிறார் என்று ஆறுதலடையாலம் ஆனால் இன்று 3 கட்சிகள் ஒரணியாகவும் 11 கட்சிகள் தனித்தனியாகவும் கேட்பது ஆரோக்கியமானதல்ல .
நாமும் கட்சிகளின் ஒன்றிணைவிற்காக பல முயற்சிகள் எடுத்தோம். ஒவ்வொரு கட்சியும் விட்டுக் கொடுப்பின்றி சகலரும் பாராளமன்றம் செல்ல வேண்டும் என்ற கொள்கையுடனேயே உள்ளனர் .
கிழக்கு தமிழர் கூட்டணி என்று பல கட்சிகள் ஒன்றிணைய முயற்சித்த போதும் அது இறுதியில் எதிர்பார்த்த இலக்கை அடையாமல் இரு கட்சிகள் மட்டுமே ஒன்றிணைந்தன. இந்த முயற்சியினால் புதிய புதிய வேட்பாளர்கள் அறிமுகமாகி வாக்கு பிரிப்பு ஏற்படப் போவதுதான் உண்மை .
அபிவிருத்தி சார் அரசியல் கிழக்கிற்கு ஒர் தமிழ் அமைச்சர் என பிரச்சாரங்களுக்காக கூறப்பட்டாலும் நடக்கப்போவது என்னவோ மறுதலையாகத்தான் என்பதற்கு பின்வருபவைதான் சான்றுகள் .
- 2019 ஒக்ரோபரில் நியமிக்கப்பட்ட கிழக்கு அபிவிருத்தி அமைச்சருக்கு இருந்து பணியாற்ற ஒர் அமைச்சு அலுவலகம் வழங்கப்படவில்லை
- கிழக்கு தொல்பொருள் ஜனாதிபதி செயலணியில் ஒரு தமிழ் பேசும் இனத்தவரும் நியமிக்கபடாமை
- 2008-2015 இந்த காலகட்டத்தில் தமிழர் ஒருவர் புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருந்தும் மிகுந்த வரையறைகளுடனே செயறபட்டமை .
- கிழக்கு மாகாண ஆளுநனராக இதுவரை ஒரு தமிழருக்கும் வாயப்பு வழங்கபடாமை .
அதைவிட இம்முறை ஆட்சி அமைப்பிதற்கு தேவையான 113 ஆசனங்களுக்காக பேரினவாத அரசு தமிழ் பேசும் பாராளமன்ற உறுப்பினர்கள் எவரிடமும் கெஞ்சப் போவதுமில்லை அதற்கு பிரதி பலனாக அமைச்சு பதவி எதுவும் வழங்கப்போவதுமில்லை சர்வதேச திருப்திக்காக வடக்கிற்கும் மலையகத்திற்கும் இரு தமிழர்களும் கிழக்கிற்கு ஒரு முஸ்லிம் பா.ம உறுப்பினரும் அமைச்சர்களாக நியமிக்கபடலாம்.
ஆகவே எம் உறவுகளே நாம் உங்களிடம் பின்வரும் விடயங்களை உரிமையுடன் கேட்டு நிற்கின்றோம் .
1.தயவு செய்து கட்சிகளின் மேல் உள்ள அதிருப்தியில் உங்கள் பொன்னான வாக்கை அளிக்க மறக்க வேண்டாம் .
தயவு செய்து அனைவரும் ஓகஸ்ட் 5ம் திகதி அன்று வாக்களிக்கவும்
2.அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு கட்சியை தேர்ந்தெடுத்து ஏக மனதாக ஒரு கட்சிக்கு மட்டும் வாக்களியுங்கள் இதனால்தான் எமது பிரதிநிதித்துவம் காப்பற்றப்படும் . ( இளைஞர் குழுக்கள் கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஆலய பரிபாலன சபைகள தொழிற்சங்கங்கள் விளையாட்டு கழகங்கள் அனைவரும் இணைந்து நிலைமையை ஆராயந்து எந்த கட்சிக்கு வாக்களிப்பதால் தான் எமது பிரதிநிதித்துவம் காப்பற்றப்படும் என்பதை அறிந்து வாக்களியுங்கள்
- உங்களுக்கு ஒரு முன்னாள் பா.உறுப்பினர் மீதோ அல்லது வேட்பாளர் மீதோ உள்ள வெறுப்பினால் தேர்தலை பகிஷ்கரித்து விடாதீர்கள் உங்கள் கட்சியில் புதிய வேட்பாளர்களை ஆதரித்து அவர்களையாவது பாராளமன்றம் அனுப்புங்கள் .
3.நீங்கள் யாருக்கு வாக்களிப்பது என எடுக்கும் முடிவு ஓரு பாராளமன்ற உறுப்பினர் உருவாக்க பயன்பட வேண்டுமே தவிர ஒரு சில நூறு வாக்கு எடுத்து வாக்கு சிதைவுக்கு துணைபோகும் கட்சிக்கோ / வேட்பாளருக்கு அளிக்கப்பட்டதாக இருக்க கூடாது என்ற முடிவிலிருந்து எம் பிரதேசத்தில் உள்ளவர்களின் அரசியல் முதிர்ச்சயை வேட்பாளர்கள் அறியவேண்டும் .
இவ்வாறு ஒற்றுமையாக சிந்தித்து வாக்களிப்பதன் மூலம் அதிக தமிழ்பாராளமன்ற உறுப்பபினர்களை அனுப்பி எமது அடிப்படை பிரச்சனையான உரிமைசார் அரசியலையும் அபிவிருத்தி சார் அரசியலை ஓன்றாக முன்னெடுக்க வழிசமைப்போம் .
பிரதான இணைப்பாளர்
தமிழ் சமூக செயற்பாட்டாளர் இணையம்