உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக அமைய இருக்கும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா இன்று (ஓகஸ்ட் 5) நடைபெற்றது. இதற்காக டெல்லியிலிருந்து அயோத்தி சென்ற பிரதமர் நரேந்தர மோடி அங்குள்ள அனுமன் கோயில், குழந்தை ராமர் கோயில்களில் வழிபாடு நடத்திய பின்னர் சுமார் 12.40 மணியளவில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நிகழ்வு ஆரம்பமானது
விழாவுக்கான மேடையில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் சமூக இடைவெளியுடன் அமர்ந்து பூமி பூஜையில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேதங்களை முழங்க ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் . 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கல் அடிக்கல்லாக நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.