2020 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து, சிவஞானம் சிறிதரன், எம்.ஏ சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தெரிவான நிலையில், ஏனைய நான்கு ஆசனங்கள் நான்கு கட்சிகளுக்கிடையில் பகிரப்படுகின்றன.
இதன்படி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனத்தைக் பெற்றுள்ளன.
அவற்றின் அடிப்படையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 31,658 வாக்குளையும்,
செ.கஜேந்திரன் 24,794 வாக்குகளும்,
மணிவண்ணன் 22,741 வாக்குகளும்
சுகாஸ் 21,467 வாக்குகளும் கிடைத்துள்ளன.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில்,
சி.வி.விக்னேஸ்வரன் 21,554 விருப்பு வாக்குகளையும், அருந்தவபாலன் 12,674 வாக்குகளையும்,
சிவாஜிலிங்கம் 10,123 வாக்குகளையும்
சுரேஸ் பிரமச்சந்திரன் 7,154 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில்,
டக்ளஸ் தேவானந்தா 32,142 விருப்பு வாக்குகளையும்,
றெமீடியஸ் 10,780 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதன் யாழ். தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளான, 36,895 வாக்குகளைப் பெற்றுள்ளார்