Home இந்தியா கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து – 11 போ் பலி

கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து – 11 போ் பலி

by admin

ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக செயல்பட்டு வந்த  விடுதி ஒன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏற்பட்ட   தீவிபத்தில்  11 டீபா்  உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

5 மாடி கொண்ட அந்த சொகுசு விடுதியில்  திடீரென இன்று காலை 5 மணியளவில்  இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும்   விடுதியில்  சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் 7 பேர்  உள்ளடங்கலாக   11  போ் உயிாிழந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.   மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து  நேரத்தில் 50க்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு  இருந்துள்ளனா் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது . மின்கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஆந்திரப்பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் மெகடோட்டி சுச்சரிதா தெரிவித்துள்ளார்.   #விஜயவாடா #கொரோனா #தீவிபத்து

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More