ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளரென ஐ.தே.க செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியின் அடுத்த தலைவா் பதவி்க்காக ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன ஆகியோர் உட்பட தனது பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாகலும் அவர் தெரிவித்துள்ளார். இன்றையதினம் சிறிகொத்தவில் இடம்பெற்ற கட்சியின் விசேட கூட்டத்தின் போது ரணில் விக்கிரமசிங்க இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளதாகவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவளை எதிர்வரும் புதன்கிழமை புதிய தலைவராக யாரை தெரிவு செய்வது என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படலாம் எனவும் தொிவிக்கப்படுகின்றது. #ஐக்கியதேசியகட்சி #ரணில்விக்கிரமசிங்க #அகிலவிராஜ்