தேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி ) யின் தேசிய பட்டியல் உறுப்பினராக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தலைமைச் சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அககட்சித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளாா்.
இவர், பல்கலைக்கழக கலாநிதிகளின் சங்கத்தின் செயலாளராக செயற்பட்டுள்ளதுடன் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் குழுவிலும் உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பான தீர்மானம் இன்று (12) தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று அறிவிக்கப்படவுள்ளதாகவும் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளாா். #தேசியமக்கள்சக்தி #தேசியபட்டியல் #ஹரினிஅமரசூரிய #அனுரகுமார