09ஆவது நாடாளுமன்றின் முதலாவது கூட்டத்தொடர் ஓகஸ்ட் 20 வியாழக்கிழமை முற்பகல் 09.30க்கு ஆரம்பமாகவுள்ளதாக வா்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது
அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையில் குறிப்பிட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, ஜனாதிபதியால் இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியால் நேற்றைய தினம் மேலும் சில வர்த்தமானி அறிவித்தல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டமை, பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டமை, அமைச்சரவை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், அமைச்சரவை செயலாளர் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் தொடர்பில் இந்த வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது # நாடாளுமன்றம் #கூட்டத்தொடர் #ஓகஸ்ட் #வர்த்தமானி