அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், துணை ஜனாதிபதி வேட்பாளாராக ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹரிஸின் புதிய அலுவலக தலமையாளராக யாழ்ப்பாண பின்னணியைக்கொண்ட றோகினி லக்ஸ்மி கொசோக்லு என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை– அமெரிக்க வம்சாவழியைச் சேர்ந்த ரோஹினி கொசோக்லு என்ற பெண் உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் அலுவலக தலமையாளர் பதவியில் நியமிக்கப்பட்ட முதல் ஆசிய அமெரிக்க பெண் றோகினி லக்ஸ்மி கொசோக்லு என்பதும், அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் பதவியில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், முதல் ஆசிய (இந்திய தமிழக பின்னணியியைக் கொண்ட) பெண் என்பதும் வரலாகிறது.
யாழ்ப்பாண பின்னணியைக்கொண்ட றோகினி லக்ஸ்மி கொசோக்லு இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்திய கலாநிதி விஜயதேவேந்திரம் ரவீந்திரன் – சோபணா ரவீந்திரன் (Wijeyadevendram Ravindran and Shobhana Ravindran ) தம்பதிகளின் புதல்வி எனவும் 1980களின் பிற்பகுதியில் இவர்கள் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் துணை ஜனாதிபதி வேட்பாளராக கலிபோர்னியா செனட்சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகின்றார்.