198
இன்று மாலை தங்க இடப வாகனத்தில் வேலவனும் வெள்ளை இடப வாகனங்களில் தேவியரும் உலா வந்தனர். பெரிய சப்பரத்தில் உலா வரும் நாளாயினும், சுகாதார நடைமுறையை ஒட்டி இன்று சப்பர உலா நிகழவில்லை. ஆயினும் இன்றைய திருவுலாவில் முருக நாம பஜனை சிறப்பம்சமாக இடம்பெற்றது.
தீவட்டி அலங்காரங்களுடன், பச்சை வண்ண அலங்காரத்தில் இன்றைய உத்ஸவம் நிகழ்ந்தமை சிறப்பம்சமாகும். #நல்லூர்கந்தசுவாமிகோவில் #திருவிழா #சப்பரஉலா
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love