நாடாளவிய ரீதியில் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் நேற்றிரவு (17) 10 மணியளவில் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், தொழில்நுட்ப கோளாறு தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு தொிவித்துள்ளது.
அதேவேளை நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட 9 பேர் அடங்கிய குழுவின் முதற் கூட்டம் இன்று (18) காலை நடைபெறவுள்ளது.
மின் விநியோகம் தடைப்பட்டமை குறித்து ஆராய்ந்து 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த குழுவிற்கு பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #மின்விநியோகம் #விசாரணைக்குழு #மின்சக்திஅமைச்சு