வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிமுகம் செய்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேலும் பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கு இன்று (19) அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
பொதுத் தேர்தலினால் இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தல் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. அதன் கீழ் பட்டதாரிகள் 50,000 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. இன்றைய தீர்மானத்தின்படி மேலும் பத்தாயிரம் பேர் அதனுடன் இணைக்கப்படவுள்ளனர்.
வேலையற்ற பட்டதாரிகள் சிலர் இன்று ஜனாதிபதி அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். அமைச்சரவை கூட்டம் நிறைவுபெற்று சென்றுகொண்டிருந்த ஜனாதிபதி , அவர்களின் அருகில் தனது வாகனத்தை நிறுத்தி, அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்குவதாக குறிப்பிட்டார்.
“இப்போது வீடுகளுக்குச் செல்லுங்கள் மேலும் பத்தாயிரம் பேருக்கு தொழில் வழங்குவதற்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டது” என்று ஜனாதிபதி ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கூறினார். #பட்டதாரிகள் #தொழில்வாய்ப்பு #அமைச்சரவை #அனுமதி