இலங்கை நாடாளுமன்றின் குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று ஆரம்பமாகியுள்ள நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் ஆரம்பத்தில் மகிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிய நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்துள்ளாா்.
இதனால் புதிய சபாநாயகர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை புதிய பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய தெரிவாகியுள்ளார். ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பெயரை மகிந்த அமரவீர முன்மொழிய நிமல் லங்சா வழிமொழிந்துள்ளாா்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு வேறு யாருடைய பெயர்களும் முன்வைக்கப்படாத நிலையில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பிரதி சபாநாயகராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். #அங்கஜன்இராமநாதன் #சபாநாயகர் #மகிந்தயாப்பா