151
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிர்வரும் அரசியலமைப்பின் ஊடாக பதவி ஒன்று வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நேற்று (20) மாலை இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தை தொடா்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது குறித்த அரசியலமைப்பு தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா தலைமையில் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் தயாசிறி தெரிவித்துள்ளார். #அரசியலமைப்பு #மைத்திரிபால #தயாசிறிஜயசேகர
Spread the love