கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவுக்கு வரும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.
1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் புளு மறைய இரண்டாண்டுகள் செ்னற தாக தொிவித்த அவா் தற்போதுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களை கொண்டு நோய்த்தொற்று பரவலை குறுகிய காலத்தில் கட்டுப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தொிவித்துள்ளாா்.
மனிதர்களுக்கிடையேயான தொடர்புகள் அதிகரித்துள்ளதால், வைரஸ் பரவலுக்கான வாய்ப்பு நிறைய உள்ளது னெ்ற போதிலும் நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கான தொழில்நுட்பமும், அறிவும் நம்மிடம் உள்ளது எனவும் தற்சமயம் தேச ஒற்றுமையும், உலகளாவிய ஒற்றுமையும் மிகவும் அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளாா்.
கடந்த 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் புளு பெருந்தொற்றால் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் ஐந்து கோடி மக்கள் உயிரிழந்திருந்தனா்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் சுமாா் எட்டு லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2.27 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #கொரோனா #உலகசுகாதாரநிறுவனம் #ஜெனீவா #ஸ்பானிஷ்புளு