குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை அமுல்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குருணாகல் மேயர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை நேற்றைய தினம் வரை நடைமுறைப்படுத்த வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் நேற்றையதினம் இது தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கபடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது
குருணாகலை நகர மத்தியில் அமைந்துள்ள 13 ஆவது நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட புவனேகபாகு அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருணாகலை மேயர், நகர சபை ஆணையாளர் மற்றும் நகரசபையின் பிரதான பொறியியலாளர் உட்பட மேலும் இருவருக்கு எதிராக குருணாகலை நீதவான் நீதிமன்றத்தால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தனக்கு எதிராக குருணாகலை நீதவான் நீதிமன்றால் வெளியிடப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை ரத்துச் செய்யக் கோாி குறித்த 5 பேரும் தாக்கல் ரீட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. #குருநாகல்மேயர் #பிடியாணை #தடை #புவனேகபாகுஅரசசபைகட்டிடம்