புத்தளத்திலிருந்து வந்து வடமராட்சி கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் 3 படகுகள் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் அதிகாரிகளால் மீட்கப்பட்டன.
எனினும் தொழில் ஈடுபட்டவர்கள் படகுகளை கைவிட்டு தப்பித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நாகர்கோவில் கடற்பரப்பில் நேற்று இரவு இடம்பெற்றது.
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பாக தென்னிலங்கை மீனவர்கள் தொழில் ஈடுபடுவதாக அண்மைக்காலமாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் நாகர்கோவில் கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையைப் பயன்படுத்தி தென்னிலங்கை மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டனர். அவர்கள் தொடர்பில் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
தொழில் ஈடுபட்ட புத்தளத்தைச் சேர்ந்த மீனவர்கள் கரையேறிய போது, அங்கு கூடிய உள்ளூர் மீனவர்கள் அந்தப் படகுகளை அதிகாரிகளின் உதவியுடன் தடுக்க முயன்றனர். அதன்போது படகுகளில் இருந்தவர்கள் தப்பித்த நிலையில் 3 படகுகளும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மீட்கப்பட்டன.
படகுகளில் ஒன்றில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலை ஒன்று மீட்கப்பட்டது.அதனை அடுத்து படகுகளை நீதிமன்றில் பாரப்படுத்தும் நடவடிக்கைகளை நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் எடுத்துள்ளனர். #புத்தளம் #மீனவர்கள்#தப்பிஓட்டம் #நாகர்கோவில் #மீட்பு