கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சர்ச்சைக்குரிய வெள்ளை வான் கடந்தல் சம்பந்தமாக ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி, அதன் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி மொஹமட் ஹசீம் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிஹான் குலதுங்க முன்னிலையில் பிரதிவாதிகளிடம் சட்டமா அதிபர் அந்த குற்றப் பத்திரிகையை கையளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரதிவாதியும் தனித்தனியாக 10 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 5 இலட்சம் பெறுமதியான 2 சரீர பிணைகளிலும் விடுவிக்கப்பட்டதுடன், பிணையாளர்களில் ஒருவர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிணையாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் வசிப்பதை உறுதிப்படுத்தும் கிராம உத்தியோகத்தரின் சான்றிதழ் முன்வைக்கப்பட வேண்டும் எனவும், அவர்கள் எந்தவித குற்றச் செயல்களில் ஈடுப்படவில்லை என்பதை காவற்துறை அத்தாட்சிப் பத்திரத்தையும் சமர்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #வெள்ளைவான் #ராஜித #ரூமிமொஹமட் #குற்றப்பத்திரிகை