(க.கிஷாந்தன்)
ஊவா – வெல்லச பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் ஐவர் பயணித்த கார், வீதியை விட்டு விலகி 40 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவரும் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினா் தெரிவித்தனர்.
பதுளை – மஹியங்கனை வீதியில் சொரனாதொட்ட பகுதியில் வைத்தே இன்று (02.09.2020) அதிகாலை 2.50 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது எனவும், விபத்துக்குள்ளான ஐவரில் நால்வர் பெண்கள் என்றும், அவர்களில் ஒருவர் கர்ப்பிணி தாயென்றும் காவல்துறையினா் தெரிவித்தனர்.
காரை செலுத்திய விரிவுரையாளர் நித்திரை கலக்கத்தில் இருந்தாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என காவல்துறையினா்மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பதுளை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். #விரிவுரையாளர் #ஊவா #விபத்து #கர்ப்பிணி