வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இம்மூன்று நாடுகளிலும் அண்மைக் காலத்தில் ‘கோவிட்-19’ நோயால் பாதிக்கப்படபவா்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை மலேசிய அரசு சுட்டிக் காட்டியுள்ள
இம்மூன்று நாடுகளிலும் அண்மைக் காலத்தில் ‘கோவிட்-19’ நோயால் பாதிக்கப்படபவா்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டியுள்ள மலேசிய அரசு செப்டம்பர் 7ஆம் திகதி முதல் இந்த தடை அமுலுக்கு வருவதாக தொிவித்துள்ளது.
இதையடுத்து மலேசியாவில் நீண்ட காலம் தங்கியிருப்பதற்கான விசா வைத்துள்ள இந்தியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சிக்கல் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த மூன்று நாடுகளிலும் வைரஸ் தொற்று அதிகரித்ததால் மலேசிய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
இதேபோல் ஏனைய நாடுகளின் வைரஸ் தொற்று நிலவரத்தையும் மலேசிய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பிட்ட மூன்று நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை மற்ற நாடுகளின் மீதும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தொிவித்துள்ளாா். #கொரோனா #இந்தியா #இந்தோனேசியா #பிலிப்பைன்ஸ் #மலேசியா #தடை