150
சங்கமன் கண்டி கடற்பரப்பிலிருந்து 38 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் எரிபொருள் கப்பல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
பனமா நாட்டுக்கு சொந்தமான“MT NEW DIAMOND“ எனும் எண்ணெய் கப்பல் குவைத்திலிருந்து இந்தியா நோக்கி பயணித்த போது இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீவிபத்து காரணமாக சுமார் 17 பேர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் கடற்படையின் மூன்று கப்பல்கள் அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். #எரிபொருள்கப்பல் #தீவிபத்து #பனமா
Spread the love