பனாமா நாட்டுக் கப்பலான “MT NEW DIAMOND“ என்ற கப்பல் தீப்பற்றி எரியும் சம்பவத்தில் காணாமல் போயிருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
சங்கமன்கந்த கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் கொதிகலனில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக குறித்த கப்பல் தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது #தீப்பற்றி #பனாமா #பிலிப்பைன்ஸ் #ஊழியர்