பனாமா அரசுக்கு சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பல் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தீ விபத்துக்குள்ளாகிய நிலையில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் விமானப்படை ஏனைய நாடுகள் இணைந்து குறித்த கப்பலில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
இருந்த போதிலும் இத்தீ விபத்தினால் கடலில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்படாது என பல்வேறு தரப்பினரும் அறிவித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் என்ணெய் பரவல் அடையாளங்கள் தென்பட்டுள்ளன.
இவ்வெண்ணெய் பரவலானது விபத்திற்குள்ளன கப்பலின் எண்ணெய் கசிவா அல்லது வேறு படகில் இருந்து வெளியாகிய எண்ணெய் கசிவா என அறிய முடியவில்லை.
அத்துடன் குறித்த விபத்து தொடர்பாக முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மாநகர சபைகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்திருந்தது.
இதே வேளை இன்று கரையோர மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்எண்ணெய் பரவலின் எச்சங்கள் கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் தாவரங்களில் தென்படுவதை காண முடிந்தது. #கல்முனை #எண்ணெய்பரவல் #பனாமா #விபத்து
—