உலக அளவில் இந்தியாவில்தான் முதல் முறையாக ஒரேநாள் பாதிப்பு அதிகம் பதிவாகியுள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 96,000 பேருக்கு இவ்வாறு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,70,43,179 ஆகவும் மொத்த உயிாிழப்புகள் 8,82,986 அகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,91,46,401 ஆகவும் உள்ளது.
உலக அளவில் அதிகளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனாவின் மொத்தப் பாதிப்பு 64,29,805 ஆகவுள்ளது. அதற்கு அடுத்ததாக பிரேசிலில் 41,23,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரேநாளில் அமெரிக்காவில் 40,748 பேருக்கும் பிரேசிலில் 31,199 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் ஒரே நாளில் 90,600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41,10,839 ஆகவுள்ளது.
இந்தியாவில் கடந்த 10 நாட்களில் மட்டுமே 8 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உலகத்திலேயே மிக குறைவான நாட்களில் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது.
மேலும் இந்தியாவில் ஒரே நாளில் குணமடைந்தோர் எண்ணிக்கை 73,161 ஆகவுள்ள நிலையில் மொத்த குணமடைந்தோா் எண்ணிக்கை 31,77, 673ஆகவுள்ளதுடன் தற்போது 8,61, 866 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்தியாவில் ஒரேநாளில் 1044 பேர் கொரோனாவினால் உயிாிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 70,679 ஆகவுள்ளது.
மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 20,800 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாநிலங்களில் ஆந்திரா 10,825; கர்நாடகா 9,746; உபி. 6590; தமிழகம் 5,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது #இந்தியா #பாதிப்பு #கொரோனா