(க.கிஷாந்தன்)
ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம்.முஷாமில் உத்தியோகபூர்வமாக ஊவா மாகாண ஆளுநர் காரியாலயத்தில் தனது கடமைகளை இன்று (07.09.2020 ) மத வழிபாடுகளுடன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த அரசாங்க காலத்தில் வட மேல் மாகாண ஆளுநராக இருந்த இவர் ஊவா மாகாணத்தின் ஆளுநராக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
சிறிது காலம் மேல் மாகாண ஆளுநராக இருந்த இவர், கொழும்பு மாநகர சபையின் மேயராகவும் செயற்பட்டு வந்தார், சிறு காலம் மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும் சேவையாற்றிருந்தார்.
இன்று இடம்பெற்ற கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சர் நிமல் ஸ்ரீபாலத சில்வா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷன தெனிபிட்டிய, சாமர சம்பத் தஸநாயக்க, டிலான் பெரேரா, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பொதுமக்கள், சர்வமத தலைவர்கள், மற்றும் இராணுவம், காவல்துறைஅதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். #ஊவா #ஆளுநர் #முஷாமில்