பிாித்தானியாவில் எதிா்வரும் திங்கட்கிழமை முதல் ஆறு போ் மட்டுமே ஒன்று கூட முடியுமென பிரதமா் பொரிஸ் ஜோன்சன் அறிவித்ஹதுள்ளாா்.
பிாித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கடுமையான உயர்வு ஏற்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள பிரதமா் பொரிஸ் ஜோன்சன், கொரோனா வைரசின் இரண்டாவது அலையை நிறுத்த பிாித்தானிய மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தொிவித்துள்ளாா்.
அந்தவகையில் மக்கள் கூடுவதனை ஆறு பேராக குறைப்பதற்கான தனது முடிவை பிரதமர் அறிவித்துள்ளாா். காலப்போக்கில் இந்த கட்டுப்பாட்டு விதிகள் மிகவும் சிக்கலானதாகவும், குழப்பமானதாகவும் மாறிவிட்டன என்பது தனக்குத் தெரியும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.
ஆறு பேர் மட்டும் கூடுவது என்பது எந்த இடத்திலும் உள்ள அனைத்து கூட்டங்களுக்கும் பொருந்தும் எனவும் அவா் தொிவித்துள்ளாா்.
மேலும் இந்த அறிவித்தலானது இரண்டாவது முடக்கநிலை அல்ல எனக் குறிப்பிட்டுள்ள பிரதமா் இதன் நோக்கம் இரண்டாவது தேசிய பூட்டுதலைத் தவிர்ப்பதுதான் எனவும் தொிவித்துள்ளாா்.
மேலும் தனியார் வீடுகள், பூங்காக்கள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட உட்புற மற்றும் வெளிப்புற கூட்டங்களுக்கு இந்த தடை பொருந்தும் எனவும அவா் தொிவித்துள்ளாா்.
இதேவேளை வீடு அல்லாத 6 பேரை விட அதிகமாக இருக்கும் இடம் அல்லது வேலைத் தளங்கள், கல்விக் கூடங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் எனவும் இது போல், திருமணங்கள், இறுதி சடங்குகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு விளையாட்டுகளுக்கும் விலக்கு அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளாா். #பிாித்தானியா #ஒன்றுகூட #பொரிஸ்ஜோன்சன் #கொரோனா