மண்டபம் அருகே கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகின் மூலம் கடத்த தயார் நிலையில் இருந்த சுமார் ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் கட்டி மூடைகளை மெரைன் காவல்துறையினா் இன்று சனிக்கிழமை மாலை மீட்டுள்ளதோடு,சந்தேக நபர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
வாகன சரதி உள்ளடங்களாக வேதாளை பகுதியை சேர்ந்த இருவர் உட்பட 3 பேரை கைது செய்த காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மிளகு, மஞ்சள் கடத்த உள்ளதாக ராமேஸ்வரம் மெரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மண்டபம் மெரைன் காவல் நிலைய காவலர்கள் வேதாளை கடற்கரைக்கு இன்று சனிக்கிழமை மாலை விரைந்தனர்.
அப்போது குஞ்சார்வலசை பகுதியில் இருந்து வேதாளை நோக்கி கடற்கரை வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்திய மெரைன் காவல்துறையினர் வாகன சாரதியிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இ தன் போது குறித்த வாகனத்தின் சாரதி முன்னுக்கு பின் முறனாக பதில் அளித்தால் சந்தேகம் அடைந்த காவல்துறையினா் வாகனத்தை சோதனை செய்ததில் 34 மூடைகளில் சமையல் மஞ்சள் கட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் வாகான சாரதி உள்ளடங்களாக 3 பேரை கைது செய்த காவல்துறையினா் 34 மூடைகளில் இருந்த ஆயிரம் கிலோ மஞ்சள் கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். #இந்தியாவிலிருந்து #இலங்கைக்கு #கடத்த #மஞ்சள் #கைது