இந்தியாவில் தொடர்ந்து ஒரு நாளைக்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த, துரிதமான மற்றும் திறன் வாய்ந்த நடவடிக்கைகளின் மூலம் அதிக அளவிலான பரிசோதனைகள், சிறப்பான கண்காணிப்பு மற்றும் உயர்தர மருத்துவ சிகிச்சை மூலம் இது சாத்தியமாகி வருவதாக சுட்டிக்காட்டப்பாட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 78,399 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் எனவும் இதன் மூலம் இந்தியாவில் மொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்து 37,02,595 ஆக அமைந்துள்ளது எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குணமடைந்தோரின் விகிதம் 77.88 சதவீதமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் சுமார் 13 ஆயிரம் பேர் குணமடைந்துள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது #இந்தியா #கொரோனா #குணமடைந்து #பரிசோதனைகள்