மன்னார் நகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தாமான வீட்டின் எல்லை பகுதியோடு சட்ட விதிகளுக்கு மாறக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றை நிறுத்தக்கோரி நகரசபை மற்றும் நகர திட்டமிடல் அபிவிருத்தி அதிகாரசபையிடமும் பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை எனவும் தொடர்ந்து சட்ட விரோத கட்டிட நிர்மாணப் பணிகள் இடம் பெறுவதாகவும் பாதிக்கப்பட நபர் இன்று செவ்வாய்கிமை (15) மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
மன்னார் நகர பகுதியில் வீடு ஒன்றின் மதிலோடு வீட்டின் உரிமையாளரின் அனுமதி இன்றி அடுக்கு மாடி ஒன்றை அமைப்பதற்கு மன்னாரை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் முயன்றதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட தரப்பினர் இக்கட்டிடம் சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டதை முன்னிறுத்தியும் குறித்த கட்டிட நிர்மாணம் தங்களின் இயல்பு நிலையை பாதிப்பதாகவும் குறித்த கட்டிடம் அமைக்கப்படுவதனால் தங்களுடைய தனித்துவம் பாதிக்கப்படுவதாகவும் மாசுகள் ஏற்படுவதாகவும் கோரி குறித்த கட்டிட நிர்மாண வேலைகளை நிறுத்துமாறு மன்னார் நகர சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவ்வாறு இல்லாவிட்டால் மதிலில் இருந்து சிறிய அளவில் இடைவெளி வைத்து கட்டிட பணியை மேற்கொள்ளுமாறு கோரி மன்னார் நகர சபை வடமாகாண ஆளுனர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பிய நிலையில் இது வரை குறித்த சட்ட விரோத கட்டிட நிர்மாணம் இடம் பெறுவதாகவும் மன்னார் நகர சபை பாதீக்கப்பட்ட வீட்டினருக்கு எதிராக செயற்படுவதாகவும் சட்ட விரோத கட்டிடநிர்மாணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் மன்னார் நகரசபை தவிசாளர் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளனர்
குறித்த கட்டிடத்தில் கீழ் பகுதி 2014 ஆண்டு கட்டப்பட்டதாகவும் மேல் பகுதி இவ்வருடம் யூன் மாதம் அளவில் தங்களின் அனுமதி இன்றி ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறித்த கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட நகரசபை அனுமதி மற்றும் ஏனைய அனுமதிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோரும் போது இதுவரை அவற்றுக்கான பதில் நகரசபையினால் வழங்கப்படவில்லை எனவும் மேன்முறையீட்டுக்கும் பதில் இல்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனைய பகுதிகளில் இவ்வாறான கட்டிடங்கள் அமைக்கும் போது அயல் வீட்டவர்களின் அனுமதி தொடர்பாக பரிசீலிக்கப்படுகின்ற போது இந்த கட்டிடத்தின் உரிமையாளர் விடயத்தில் மாத்திரம் தங்களிடம் அனுமதியோ ஆலோசனையோ கேட்கவில்லை எனவும் தொடர்ந்து நகரசபை மற்றும் நகர திட்டமிடல் அபிவிருத்தி அதிகாரசபை தங்களை அலைக்கழிப்பதாகவும் எனவே இப்பிரச்சினைக்கான உடனடியான தீர்வை பெற்றுதருமாறு பாதிக்கப்பட குடும்பத்தினர் கோரிக்கை வைத்து முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். #மன்னார் #நகரசபை #மனிதஉரிமைகள்ஆணைக்குழு #முறைப்பாடு #தனியார்