அம்பாறை கல்முனை வாடி வீட்டு கடற்கரையில் அன்றாடம் இடம்பெறும் சமூகச் சீர்கேடுகள் தொடர்ந்து வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான போக்கினால் இளவயதினர் மதுவிற்கு அடிமையாகி வருவதுடன் பாரதூரமான சீர்கேடுகளும் தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான நடவடிக்கையினால் பிரதேசத்தில் ஏற்படுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்கள் பாலியல் சில்மிசங்கள் போன்றவற்றால் ஏற்படும் பின்விளைவுகள் செயற்பாடுகள் பாரிய தாக்கத்தை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்டநாட்களாக சமூக சீர்கேடு இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படும் இந்தக் கடற் கரையை அண்மித்து கல்முனை இராணுவ முகாம் மற்றும் கடற்படையினரின் முகாம் என்பன காணப்படுவதாகவும், தற்போது அங்கு உள்ள இராணுவ முகாம்களில் பாதுகாப்பு அரண் போடப்பட்டுள்ள போதிலும் இவ்வாறு சமூக சீர்கேடுகள் தொடர்வதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் சமூக சீர்கேடு சம்பவங்களோடு தொடர்புடையவர்களை அணுகி இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்கள் சமூகத்தோடு இயைந்து வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த சகல தரப்பினரும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #அம்பாறை #கல்முனை #வாடிவீட்டு #கடற்கரை #சமூகச்சீர்கேடுகள் #விசனம் #இராணுவமுகாம்