முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நகைக் கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவா் சாவகச்சேரி காவல்துறையினாினால் கைது செய்யப்பட்ட போது குறித்த நபர் தப்பிச் சென்று குளத்தில் குதித்து உயிாிழந்திருந்தாா்.
அது தொடர்பில் யாழ் நீதிமன்றல் இடம்பெற்ற வழக்கில் அது இயற்கை மரணம் என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
எனினும் நல்லாட்சி அரசாங்க காலத்தின் போது விஜயகலா மகேஸ்வரனினால் குறித்த சம்பவம் கொலை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த போதிலும் அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் போலி சாட்சிகளின் ஊடாக குற்றம் சுமத்தப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியான மயுரன் ஞானலிங்கம் என்பவரின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #விஜயகலாமகேஸ்வரன் #அழைப்பு #ஜனாதிபதிஆணைக்குழு #விடுதலைப்புலிகள் #நகைக்கொள்ளை