முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.
திவிநெகுமவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறீ ரணவக்க தாக்கல் செய்த முறைப்பாட்டில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளமைக்கமையவே அவா்கள் இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.
அதேவேளை ரவூப் ஹக்கீம், சரத் பொன்சேகா, மலிக் சமரவிக்கிரம, ஆர். சம்பந்தன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோரும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. #ரணில் #மங்கள #சம்பிக்க #அநுரகுமார #ஜனாதிபதிஆணைக்குழு #திவிநெகும