சீனாவில் பக்ரீரியா மூலம் புதிதாக ஒரு காய்ச்சல் பரவி வருவதாகவும் இதன்மூலம் பாதிக்கப்படும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் உருவாகி உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை காவு கொண்டுள்ள நிலையில் இவ்வாறு புதிதாக ஒரு பக்ரீரியா பரவி வருவது தெரியவந்துள்ளது
வடமேற்கு சீனாவிலுள்ள கன்சு மாகாணத்தின் தலைநகர் லான்ஷோவில் இருந்து இது பரவுவது தெரியவந்துள்ளமையை அந்நாட்டு சுகாதார ஆணையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுவரை 3,245 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்த நோய் மிகவும் தீவிரத் தன்மை கொண்டதுடன் வாழ்நாள் முழுவதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும். இந்த வகை நோய் ஆண்களை மலட்டுத்தன்மையடையச் செய்யக் கூடும் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தலைவலி, தசைவலி, காய்ச்சல், உடல் சோர்வு ஆகியவை இருக்கும் எனவும் இந்த அறிகுறிகள் உள்ளவர்களில் சிலரை குணப்படுத்தலாம் எனவும் சிலருக்கு வாழ்க்கை முழுக்க அதன் பாதிப்பு தொடரக்கூடும் எனவும் இது தொடா்பில் அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (சிடிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மூட்டு வீக்கம் அல்லது உடல் உறுப்பு வீக்கம் போன்றவற்றை இந்த பக்ரீரியாஏற்படுத்தும்ி அதேவேளை மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்த நோய் பரவுவது மிகவும் அரிதாகக் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. #சீனா #பக்ரீரியா #காய்ச்சல் #கொரோனா #பக்கவிளைவு