அனுமதி முடிவடைந்ததனையடுத்து யாசகம் கேட்டு திரிந்த 450 இந்தியர்களை, சவூதி அரசு பிடித்து தடுப்பு காவல் மையத்தில் அடைத்துள்ளது. அவர்களில் உ.பி.யைச் சேர்ந்தவர்கள் அதிகம் எனும் நிலையில் அவர்கள் கண்ணீருடன் தங்கள் நிலையை விளக்கி வெளியிட்ட ஒளிப்பதிவு சமூக வலைதளங்களில் பரவிஉள்ளது.
‘‘நாங்கள் செய்த குற்றம் யாசகம் கேட்டதுதான். வேறு எந்தத் தவறும் செய்யவில்லை. வேலை இழந்ததால் இந்த நிலைக்கு ஆளாகி விட்டோம். தடுப்பு காவல் மையத்தில் துன்பத்தை அனுபவித்து வருகிறோம்’’ என் அந்த ஒளிப்பதிவில் நிலைமையை விளக்கி உள்ளனர்.
தெலங்கானா, ஆந்திரா, உ.பி., காஷ்மீர், பிஹார், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்தியர்கள் பலர் சவூதி அரேபியாவின் பல நிறுவனங்களில் வேலை செய்து வந்த நிலையில் அவர்களில் பலருருடைய அனுமதி முடிவடைந்துவிட்டது.
சாப்பாட்டுக்கு வழியில்லாததால், அவர்களில் பலர் வீதிகளில் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #இந்தியர்கள் #சவூதி #யாசகம் #குற்றம்