274
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடா்பிலான நியமனக் கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்ததுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் இன்று (22) காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா யஹம்பத்தும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #பிள்ளையான் #இணைத்தலைவா் #கோட்டாபய
Spread the love