(க.கிஷாந்தன்)
கினிகத்தேன – கொழும்பு பிரதான வீதியில் ரம்பதெனிய பகுதியில் சரிந்துவிழுந்த பாரிய கற்பாறை அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று (24.09.2020 ) மாலை முதல் அவ்வீதி ஊடான போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.
கினிகத்தேன – கொழும்பு பிரதான வீதியில் ரம்பதெனிய பகுதியில் இன்று காலை 7 மணியளவில் பாரிய கற்பாறையொன்று சரிந்து விழுந்ததால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக முடங்கியது.
இதனால் கற்பாறையை அகற்றி இயல்புநிலை திரும்பும் வரை ஹட்டனிலிருந்து கொழும்பு செல்லும் அதேபோல கொழும்பில் இருந்து ஹட்டன் வரும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்தினர்.
இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும், இராணுவத்தினரும் காலை முதல் கற்பாறையை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மாலை 5.15 மணியளவில் கற்பாறையும், மண்ணும் அகற்றப்பட்டது.
எனினும், சீரற்றகாலநிலை தொடர்ந்தால் மண்சரிவு ஏற்படும் அபாயமிருப்பதால் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். #தடைப்பட்ட #போக்குவரத்து #கற்பாறை #மண்சரிவு