இந்திய மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
வேளாண் மசோதாக்களுக்கு எதிராக மூன்று நாட்கள் புகையிரதமறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த விவசாய சங்கம் அதன்படி நேற்று முதல் புகையிரத மறியல் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றது.
இதனால் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு புகையிரத சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
போராட்டம் காரணமாக சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் பொது போக்குவரத்தும் பாதிக்கப்படலாம் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒக்டோபர் 1ம் திகதி முதல் காலவரையற்ற புகையிரத மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் மற்றும் புகையிரத மறியல் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருவதனால் முக்கிய இடங்களில் காவல்துறையினா் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் போராட்டத்தின்போது கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது #வேளாண்மசோதா #இந்தியா #விவசாயிகள் #போராட்டம்