பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு மாநாடு ஒன்று இன்று (26) இணையவழி ஊடாக இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்றதன் பின்னர் இந்தியப் பிரதமருடன் தொலைபேசி ஊடாக உரையாடிய போது, இந்த மாநாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம், நிதி அபிவிருத்தி, பாதுகாப்பு, கல்வி, சுற்றுலாத்துறை, கலாசாரம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
இந்த மாநாட்டில் இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #மகிந்தராஜபக்ஸ #நரேந்திரமோடி #இணையவழி #மாநாடு