463
யாழ். மானிப்பாயில் கோலோச்சிய வாள் வெட்டுக் குழுவின் தலைவர் தனு ரொக் மீது வாள் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.தெரிவித்தனர்.
பெருமாள் கோவிலுக்கு முன்பாக மணிக்கூட்டு வீதியில் இன்று சனிக்கிழமை (26.09.20) நண்பகல் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் வன்முறைக் குழு அப்பகுதியில் மேற்கொண்ட அடாவடியால் விபத்து இடம்பெற்றதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்னர்.
சம்பவத்தில் காயமடைந்த தனுரொக் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் யாழ். காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love