தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகா் சூர்யா அண்மையில் நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார் பேட்டையில் இயங்கி வந்த நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இனந்தொியாத நபா் ஒருவர் இன்று மதியம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொவைபேசி அழைப்பெடுத்து மிரட்டல் விடுத்துள்ளாா்
இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது அந்த இடத்தில் இயங்கி வந்த அலுவலகத்தை சூர்யா கடந்த 6 மாதத்திற்கு முன்பாகவே அடையாறுக்கு மாற்றி விட்டார் என தெரியவந்தது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் போலியானது எனவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் ஒக்டோபர் 30 ஆம் திகதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது #சூர்யா #வெடிகுண்டு #மிரட்டல் #நீட்