முன்னாள் சோவியத் நாடுகளான ஆர்மேனியா – அசர்பைஜான் படைகளுக்கிடையில் இடம்பெறும் மோதலில் பொதுமக்கள் உட்பட சுமார் 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்படும் நிலையில் இருநாடுகளிலும் சில பகுதிகளில் ராணுவச் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
குடியரசாக சுயபிரகடனம் செய்து கொண்டுள்ள நாகோர்னோ – காராபாக் எனும் மலைப்பகுதி ஒன்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் மோதல், இந்த போரைத் தூண்டியுள்ளது,
இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இடம்பெற்ற சண்டையில் 84 ராணுவத்தினா் உட்பட சுமார் 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
தமது தரப்பு இராணுவத்தினரின் உயிரிழப்புகள் தொடர்பில் கருத்து எதனையும் தொிவிக்காத அசர்பைஜான் தமது நாட்டில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்துள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
கிழக்கு ஆர்மேனிய நகரான வாடெனிஸ் பகுதியில் அசர்பைஜான் ராணுவத்தினா் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதில் உயிாிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் ஆர்மேனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா ஆகிய இருநாடுகளும், ஒருங்கிணைந்த சோவித் ஒன்றியத்தின் பகுதிகளாகக் கடந்த காலங்களில் இருந்து வந்த நிலையில் 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றிய கூட்டமைப்பு கலைக்கப்பட்டதன் பின்னா் அவை தனித்தனி நாடுகளாக உருவாகின.
இதில் அர்மீனியாவில் கிறிஸ்துவ மதத்தினரும், எண்ணெய் வளம் மிகுந்த அஜர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனா்.
இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள நகோர்னோ-கராபக் என்ற மலைப்பாங்கான பிராந்தியத்தில், 1988ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற மோதல் 1994ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த போரில் 30,000 மக்கள் பலியாகியதுடன் மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.
போரின் முடிவில் நாகோர்னோ – காராபாக் பகுதிகள் அஜர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட போதும் அர்மீனிய இனத்தவர்களால் அது கட்டுப்படுத்தப்படுகிறது .
இரு நாடுகளுக்கு இடையேயான போர் பல நாடுகளுக்கும் பரவும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அண்டை நாடுகளான துருக்கி, ரஸ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்த பிரச்சினையில் தலையிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
இந்தநிலையில் ஐ.நா செயலாளர் அன்ரனியோ குட்ரோஸ் இ து குறித்து கவலை வெளியிட்டு நிலையில் பல்வேறு நாடுகளும் இருதரப்பும் சண்டையை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது #ஆர்மேனியா #அசர்பைஜான் #மோதல் #உயிரிழப்பு #ராணுவச்சட்டம் #சோவியத் #நாகோர்னோ