இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக இருப்பதாக ள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டேரஸ், இலங்கை தொடர்பாக கடுமையான கவலைகளையும் தொிவித்துள்ளாா். .
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 45ஆவது அமர்விலே் அவா் சமா்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இதனை அவா் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும் இலங்கையிலும் ஜெனீவாவிலும், இலங்கை சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பிறர் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் அவா் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் பங்கேற்க இலங்கையிலிருந்து சென்றவர்கள், தமது பயணத்துக்கு முன்னரும் அதற்குப் பின்பும் விசாரிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவா் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.
இவ்வாண்டு நடைபெறும் மனித உரிமை கூட்டத்தொடரின் கிளைக் கூட்டங்களின்போது இலங்கை மற்றும் ஜெனீவாவைத் தளமாகக்கொண்டு இயங்கும் பல அமைப்புகள் இவ்வாறான சவால்கள் குறித்து முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உதவிச் செயலாளர் நாயகம், இலங்கையில் நிலவும் அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல் முறைமை தொடர்பாக எழுத்துமூல அறிக்கையை இலங்கை அரசாங்கத்துக்கு 2019ஆம் ஆண்டு சமர்ப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிள்ள அவா் , இவ்வாறான விடயங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளாா்.
குறித்த விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக பதில் வழங்குமென எதிர்பார்ப்பதாகவும் அவ்வறிக்கையில் அவா் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக, கடந்த பெப்ரவரி மாதம் கருத்து வெளியிட்டிருந்த அன்ரனியோ குட்டேரஸ், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா். #ஐநா #இலங்கை #மனிதஉரிமைகள் #அன்ரனியோகுட்டேரஸ் #சிவில்சமூகஅமைப்புகள்